ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று: சுவிட்சர்லாந்திலும் மாறும் நிலைமை
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தட்டம்மைத் தொற்று வேகமாக பரவிவருகிறது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இப்போதைக்கு அங்கு தட்டம்மை பரவல் இல்லை என்றாலும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் தட்டம்மை பரவும் அபாயம் உள்ளதால், நிலைமை மாறலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று
ஐரோப்பாவில், குறிப்பாக, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில், மண்ணன் அல்லது மணல்வாரி அல்லது தட்டம்மை என்னும் measles என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது.

ஆஸ்திரியா நாடு தட்டம்மை இல்லாத நாடு என பெயர் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
அதேபோல, சுவிட்சர்லாந்துக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் தட்டம்மை பரவும் அபாயம் உள்ளதால், சுவிட்சர்லாந்தும் தட்டம்மை இல்லாத நாடு என்னும் பெயரை இழக்க நேரிடலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
தட்டம்மை பயங்கரமாகப் பரவும் தொற்று எனக் கூறும் மருத்துவத்துறையினர், அது மரணம் வரையிலான மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறார்கள்.
தடுப்பூசி பெற்றுக்கொள்வதே தட்டம்மையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மிகச் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை என்கிறார்கள் அவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |