Ghibli: டிரெண்டா? ஆபத்துகள் அதிகம் - எச்சரிக்கும் நிபுணர்கள்
1985 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹாயாவோ மியாசாகி, ‘ஜிப்லி ஸ்டூடியோ’ என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி, கார்டூன்களை கைகளால் வரைந்து அதை அனிமேஷன் படங்களாக எடுக்க தொடங்கினார்.
தற்போது 40 வருடங்களுக்கு மீண்டும் ஜிப்லி படங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.
டிரெண்டாகும் ஜிப்லி படங்கள்
Open AI நிறுவனத்திற்கு சொந்தமான ChatGPT, ஜிப்லி படங்களை இலவசமாக உருவாக்கி தருவதால், குழந்தைகள் தொடங்கி, சினிமா கிரிக்கெட் பிரபலங்கள், பிரதமர் மோடி, எலான் மஸ்க் வரை தங்களது ஜிப்லி படங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முதலில் சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை வழங்கிய ChatGPT, தற்போது அனைத்து பயனர்களும் இலவசமாக ஜிப்லி படங்களை உருவாக்க அனுமதித்தது.
இதனால் ஒரு மணி நேரத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் ChatGPTயை பயன்படுவதாக அதன் நிறுவனர் சாம் ஆல்ட்மென் தெரிவித்தார்.
X தளத்தின் GROK, Google நிறுவனத்தின் Geminiயும், பயனர்கள் இலவசமாக ஜிப்லி படங்களை உருவாக்கும் வசதியை வழங்கியதால், இணையவாசிகள் தங்களது ஜிப்லி படங்களை உருவாக்கி சமூகவலைத்தளம் எங்கும் பதிவிட்டு வருகின்றனர்.
எச்சரிக்கும் நிபுணர்கள்
அதேவேளையில், இதில் உள்ள ஆபத்துகள் குறித்து, சைபர் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பயனர்கள் ஜிப்லி படங்களை உருவாக்க, தங்களது புகைப்படங்களை ChatGPT போன்ற தளங்களுக்கு வழங்குவதன் மூலம் தனியுரிமை பாதிப்பு குறித்து எச்சரிக்கின்றனர்.
இந்த புகைப்படங்களை உங்கள் அனுமதியின்றி, அந்த நிறுவனங்கள் தங்கள் AI செயலிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்த வாய்ப்புள்ளதோடு, உங்கள் புகைப்படங்களை அடிப்படையாக வைத்து AI அவதூறான படங்களை உருவாக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Think this is a fun trend? Think again.
— Proton (@ProtonPrivacy) March 27, 2025
While some don't have an issue sharing selfies on social media, the trend of creating a "Ghibli-style" image has seen many people feeding OpenAI photos of themselves and their families.
Here's why that's a problem:
1/4 pic.twitter.com/o9VqS3Teoe
பயனர்கள் படங்களை வழங்குவதன் மூலம், meta data, இருப்பிடம் போன்ற முக்கிய தகவல்களும் AI நிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
புகைப்படம், செல்போன் எண் போன்ற தகவல்களை வைத்து மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், எந்த செயலியை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபத்துகளையும் அறிந்து கவனமாக கையாள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |