சார்லஸ் மன்னரானதால் பிரித்தானிய பணத்தில் இருக்கும் மகாராணியாரின் உருவம் நீக்கப்படுமா?: இங்கிலாந்து வங்கி அளித்துள்ள விளக்கம்...

United Kingdom
By Balamanuvelan Sep 27, 2022 01:55 PM GMT
Report

சார்லஸ் மன்னரானதால், பிரித்தானிய பணத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது முதலான பல கேள்விகள் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

பணம் தொடர்பான கேள்விக்கு தற்போது இங்கிலாந்து வங்கி பதிலளித்துள்ளது.

பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய கீதம் முதல் பல விடயங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரித்தானிய பணத்தில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், அவரது மறைவுக்குப் பின் என்ன ஆகும், மகாராணியாரின் உருவம் நீக்கப்படுமா, அப்படி நீக்கப்பட்டால் ஏற்கனவே இருக்கும் பணத்தை என்ன செய்வது, நாணயங்களை உருக்கி மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட புது நாணயங்களை உருவாக்கலாம். கரன்சி நோட்டுக்களை என்ன செய்வது, இதற்கெல்லாம் செலவாகுமே, மக்கள் பணம் வீணடிக்கப்படுமோ என்றெல்லாம் மக்கள் மனதில் கேள்விகள் எழுந்தன.

சார்லஸ் மன்னரானதால் பிரித்தானிய பணத்தில் இருக்கும் மகாராணியாரின் உருவம் நீக்கப்படுமா?: இங்கிலாந்து வங்கி அளித்துள்ள விளக்கம்... | Explanation Given By The Bank Of England

Image: Rasid Necati Aslim/Anadolu Agency/Getty Images

தற்போது அந்த கேள்விகளுக்கான பதிலை இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.

அதாவது, மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட பணம் தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும். அதே நேரத்தில் புதிதாக, மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட பணமும் அச்சிடப்படும்.

இரண்டுமே சம காலத்தில் பயன்பாட்டிலிருக்கும் என இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட பணம், மற்றும் மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட பணம், இரண்டையுமே சம காலத்தில் மக்கள் பயன்படுத்தலாம்.

சார்லஸ் மன்னரானதால் பிரித்தானிய பணத்தில் இருக்கும் மகாராணியாரின் உருவம் நீக்கப்படுமா?: இங்கிலாந்து வங்கி அளித்துள்ள விளக்கம்... | Explanation Given By The Bank Of England

Image: PA Wire/PA Images

புதிதாக மன்னர் பதவியேற்றுள்ள விடயம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க ராஜகுடும்பத்தினர் விரும்புகிறார்கள். அதாவது தேவையற்ற செலவையும், தேவையற்ற குழப்பங்களையும் தவிர்க்க அவர்கள் விரும்புவதால், இப்போதைக்கு அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது.

கரன்சி நோட்டுகள் பழமையாய்ப் போகும்போது அவை புழக்கத்திலிருந்து அகற்றப்படும். அப்படிப் பார்த்தால், மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மிக நீண்ட காலத்துக்குப் புழக்கத்தில் இருக்கும் என்றே தோன்றுகிறது.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US