ரொறன்ரோ இரசாயன ஆலையில் அதிர்ச்சி சம்பவம்: ஊழியர்கள் நிலை என்ன?
ரொறன்ரோவில் அமைந்துள்ள இரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் 10 மணியளவில் குறித்த விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு Sunnybrook மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி பலர் லேசான காயங்களுடன் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி மரணமடைந்தவரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், தற்போதைய நிலவரப்படி அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட தகவலில், குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.