திடீரென்று தீப்பிடித்த வாகனங்கள்... வணிக வளாகம் அருகே அதிர்ச்சி சம்பவம்
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது.
நேற்று நண்பகல் Westside Plaza வணிக வளாகம் அருகாமையில் குடியிருக்கும் மக்கள் பொலிசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.
அதில், குறித்த வணிக வளாகம் அருகே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், கொழுந்துவிட்டெரிந்த மூன்று வாகனங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வாகனங்களில் எரிபொருள் பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பொதுமக்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.