பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை கொல்ல முயற்சி? சிரியா பயணத்தின் போது குண்டு வெடிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சிரியாவில் தங்கியிருந்த ஹொட்டல் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மேக்ரான் சிரியா பயணம்
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

சிரியாவின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா தலைமையிலான கிளர்ச்சிப் படைகளால் 2024 ஆம் ஆண்டில் பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, சிரியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பியத் தலைவர் மேக்ரான் ஆவார்.
மேக்ரான் தங்கிய ஹொட்டல் அருகே குண்டுவெடிப்பு
மேக்ரான் தங்கியிருந்த ஃபோர் சீசன்ஸ் ஹொட்டலுக்கு அருகே 2 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது.
சிரியா ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அகமது அல்-ஷராவை சந்திக்க மேக்ரானின் வாகன அணிவகுப்பு புறப்பட்ட புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஒன்று குப்பைத் தொட்டியிலும், மற்றொன்று அதற்கு சில மீட்டர் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலும் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளால் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு பெரிய புகை மண்டலம் காணப்பட்டது,
இந்த குண்டுவெடிப்பில் 4 காவல்துறை அதிகாரிகள் உட்பட 18 பேர் காயமடைந்ததாகவும், உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்ரோன் சந்திப்புகளுக்காக ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் வழியில் அவரை குறிவைத்து வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டு அவை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
வெடிச்சத்தங்களைக் கேட்காத மக்ரோன், அல்-ஷராவுடனான சந்திப்பிற்காகத் தமது குழுவுடன் பாதுகாப்பாகச் சென்றடைந்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த குண்டு வெடிப்பிற்கு பின்னர் மேக்ரோன் வெளியிட்டுள்ள பதிவில், "முழுமையான இறையாண்மை கொண்ட, பாதுகாப்பான, பன்மைத்துவமான, ஒன்றுபட்ட சிரியாவில் வாழ வேண்டும் என்ற சிரியப் பெண்கள் மற்றும் ஆண்களின் பேராவலை எதனாலும் நசுக்க முடியாது.
Rien ne pourra étouffer l’aspiration des Syriennes et des Syriens à vivre dans une Syrie pleinement souveraine, sûre, pluraliste, unie.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 7, 2026
Ce matin j’ai rencontré la Syrie dans toute sa diversité. J’ai vu la dignité, le courage et la détermination.
Ma visite se poursuit.
இன்று காலை, சிரியாவை அதன் அனைத்துப் பன்முகத்தன்மையுடனும் சந்தித்தேன். கண்ணியம், துணிவு மற்றும் உறுதிப்பாட்டைக் கண்டேன். எனது பயணம் தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |