சுவிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வெடிபொருட்கள்: ஓட்டம் பிடித்த மக்கள்
நேற்று சுவிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு வாழ்ந்த மக்கள் வீடுகளை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வெடிபொருட்கள்
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் தரைத் தளத்திலுள்ள முடி திருத்தும் கடை ஒன்றில் நேற்று காலை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக மோப்ப நாய்களுடன் பொலிசார் அங்கு விரைந்தனர். Strengelbach என்னும் நகரில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்த சுமார் 40 பேரை உடனடியாக பொலிசார் வெளியேற்ற, அவர்கள் அனைவரும் தெருவில் வந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
கொள்ளையர்கள் சிக்கியதால் தெரியவந்த உண்மை
பொலிசார், கொள்ளை முயற்சி ஒன்று தொடர்பாக நான்கு பேரை கைது செய்தபோதுதான், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
கொள்ளை முயற்சிக்கும் அந்த வெடிபொருட்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |