பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்றா?: நிலவும் குழப்பம்
பிரெக்சிட்டுக்குப் பின் பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கவேண்டியுள்ள நிலையில், விண்ணப்பம் செலுத்துவதற்கான கடைசி நாள் குறித்து பெருங்குழப்பம் நிலவுகிறது.
முதலில், பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கவேண்டிய நாள் ஜூன் 30, அதாவது இன்று என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம், பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கவேண்டிய காலகட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மட்டத்தில் செய்திகள் வெளியான நிலையில், உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கவேண்டிய காலக்கெடு 2021 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்று கூறிவரும் பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகமோ, இன்று காலை, ‘நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, இன்று நள்ளிரவுக்குள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து பிரான்சில் உங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ பிரெக்சிட் இணையதளத்திலும் பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கவேண்டிய காலக்கெடு ஜூன் 30 என்றே உள்ளது.
ஆகவே, மக்கள் குழம்பிப்போயிருக்கும் நிலையில், British in Europe மற்றும் Remain in France Together (RIFT) ஆகிய குடிமக்கள் உரிமைகளுக்கான அமைப்புகளும், The Local பத்திரிகையும், இந்த பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி வருகின்றன.
சரி, என்ன முடிவெடுப்பது? பேசாமல் விண்ணப்பித்துவிடுங்கள் என்கிறது The Local பத்திரிகை. மிக எளிய முறையில் விண்ணப்பம் செலுத்திவிடலாம் என்று கூறியுள்ள The Local பத்திரிகை, கோடை வந்தால் அரசு இயந்திரத்தின் வேகம் குறைந்துவிடும்.
ஆகவே, நேரம் இருக்கிறது என்று தள்ளிப்போடாமல், பேசாமல் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்துவிடுங்கள் என்கிறது The Local பத்திரிகை.
இது குறித்த மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.fr/20210630/confusion-surrounds-extension-of-deadline-for-brits-in-france-to-apply-for-residency/