சுவிட்சர்லாந்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்தல் நீட்டிப்பு: எப்போது வரை?
மார்ச் 22இலிருந்தாவது வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என சுவிஸ் மக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வீட்டிலிருந்தவண்ணம் வேலை பார்ப்பது கட்டாயம் என்ற விதி நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸ் அரசு, மக்கள் வேலைக்குத் திரும்புவதை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க விரும்புவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், அவர்கள் வேலைக்கு திரும்ப ஆர்வம் காட்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் சுமார் 44 சதவிகிதத்தினர் வாரத்தில் சில நாட்களாவது வீட்டிலிருந்தே பணி செய்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மற்றவர்களுடன் பழக இயலாததால் மக்கள் வருத்தமுற்றுள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும், வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது கட்டாயம் என்னும் விதி ஏப்ரல் வரையிலாவது நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.