உறைய வைக்கும் குளிர்.... மொத்தமாக 191 விமானங்களை ரத்து செய்த பிரபல கனேடிய நிறுவனம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், WestJet விமான சேவை நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
கடுமையான குளிர் காலநிலை
இது தொடர்பில் WestJet விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடுமையான குளிர் காலநிலை மற்றும் அவ்வப்போது பனிப்பொழிவு ஆகியவை விமான சேவை செயல்பாடுகளை பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Cold weather conditions impacting Canada's prairie provinces have resulted in impacts to our operations. Guests with upcoming travel plans are advised to check the status of their flight before going to the airport. Visit our Newsroom to learn more: https://t.co/JVVRqeuKO1
— WestJet News (@WestJetNews) January 12, 2024
மேலும், பாதுகாப்பிற்காக மிகுந்த எச்சரிக்கையுடன், எங்கள் குழுவினர் மற்றும் ஊழியர்கள் வெளியில் வேலை செய்யும் நேரத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வியாழன் அன்று தேசிய அளவில் மொத்தம் 87 விமானங்களும், வெள்ளிக்கிழமை 104 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக கல்கரியில் இருந்து செயல்படும் WestJet விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிய தகவல்களை பகிர்வது
மேலும், உங்கள் பயணத் திட்டங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், இதுபோன்ற இக்கட்டான சூழலில் உரிய தகவல்களை பகிர்வதும் தங்களின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Credit: Darryl Dyck
மட்டுமின்றி, பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன்னர், விமானத்தின் தற்போதை நிலை தொடர்பில் தகவல் அறிந்து கொள்ள முயற்சிக்கவும், அத்துடன், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |