எகிறும் வெப்பம்... பிரித்தானியா முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை
கடுமையான வெப்பநிலை காரணமாக உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு பிரித்தானியா முழுவதும் பள்ளிகள் மூடப்படும் என்று கருதப்படுகிறது.
பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக அடுத்த வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என இரு நாட்கள் பள்ளிகள் மூடப்படும் என தெரியவந்துள்ளது.
முதன்முறையாக கடுமையான வெப்பத்திற்கான சிவப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு அலுவலகம். மட்டுமின்றி, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவை எட்டலாம் என ஆய்வாளர்களும் கணித்துள்ளனர்.
மேலும், சூறாவளி முன்னறிவிப்பு போல வெப்பநிலை எச்சரிக்கையும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பக்கிங்ஹாம்ஷயரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்று பெற்றோர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்,
மோசமான வானிலை முன்னறிவிப்பு மற்றும் சிவப்பு வானிலை எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஹாம்ப்ஷயரில் உள்ள காஸ்டெல்லோ பள்ளியும் பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளது. மைடன்ஹெட்டில் உள்ள ஆல்ட்வுட் சர்ச் ஆஃப் இங்கிலாந்து பள்ளியானது திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுபோன்று பல்வேறு பள்ளிக்கள் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு கருதி பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.