அமெரிக்க மாகாணாம் ஒன்றை மொத்தமாக சுழற்றியடித்த மிக ஆபத்தான ஹெலீன் புயல்
மிக ஆபத்தான புயல் என அடையாளப்படுத்தப்பட்ட ஹெலீன் புயல் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்துள்ளது.
அவசர எச்சரிக்கை
வகை 4 சூறாவளியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் காற்றின் வேகம் மணிக்கு 130மைல் என இருக்கும் என்றும் கூறப்பட்டது. புளோரிடா மாகாணத்தை புயல் நெருங்கும் நிலையில், மாகாண நிர்வாகம் சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்கிரமான புயல் என உறுதி செய்ததை அடுத்து 40 மில்லியன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்திருந்தனர். காற்றின் வேகம் மணிக்கு 130மைல் என இருக்கும் என்பதால் உயிர் தப்புவது கடினம் என்றே குறிப்பிட்டிருந்தனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்குப் பிறகு புளோரிடா-ஜார்ஜியா சாலை அருகே பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அத்துடன் ஒரு டசின் ஜார்ஜியா மாவட்டங்களில் சுமார் 110 மைல் வேகத்தில் காற்றும் வீசத் தொடங்கியது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகினர். சாலைகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தம்பா மற்றும் டல்லாஹஸ்ஸி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று வெளியேறும் நடவடிக்கைகளுக்கு உத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக
இந்த நிலையில், புளோரிடாவின் டெய்லர் மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கையில், கட்டாய வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத மக்கள் தங்கள் உடல்களில் அவர்களின் பெயர்களை எழுதி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, தேசிய வானிலை மையம் தெரிவிக்கையில், இதுபோன்ற கடுமையான சூழலை கடந்த பல ஆண்டுகளாக எதிர்கொண்டதில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக காணப்படாத பெருவெள்ளத்தால் இப்பகுதி மிகவும் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வடக்கு புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா முழுவதும் புயல் எச்சரிக்கைகள் விடப்பட்டன. 55 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் ஹெலீன் சூறாவளி அல்லது வானிலை எச்சரிக்கைகளுக்கு உட்பட்டிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |