மேக்ரான் குடும்பத்தில் மீண்டும் பிரச்சினை? கேலி செய்யும் இணையம்
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி கூலிங் கிளாஸ் அணிந்து உரையாற்றிய விடயம் கேலிக்குள்ளாகியுள்ளது.
கேலி செய்யும் இணையம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கூலிங் கிளாஸ் அணிந்தவண்ணம் கூட்டத்தில் உரையாற்றினார்.

அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் சமூக ஊடகங்களில் அவரை கேலி செய்துவருகின்றனர்.
சிலர், இது என்ன ஸ்டைலா என்னும் ரீதியில் கேள்வி எழுப்ப, வேறு சிலரோ, மேக்ரான் குடும்பத்தில் மீண்டும் பிரச்சினையா என்னும் ரீதியில் கேலி செய்துவருகிறார்கள்.
அதாவது, கடந்த ஆண்டு, மேக்ரானின் மனைவியாகிய பிரிஜிட் மேக்ரான் தன் கணவரை தாக்குவது போன்ற ஒரு காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
What’s going on with Macron wearing those sunglasses? Was Brigitte on the plane? Again…. https://t.co/q89VBo8sQC pic.twitter.com/3TLP6urEtZ
— Evie CG (@cg_evie) January 20, 2026
அதை சுட்டிக்காட்டி, இப்போதும் பிரிஜிட் மேக்ரானைத் தாக்கிவிட்டாரா என்னும் ரீதியில் அவரை கேலி செய்துவருகிறது இணையம்.
உண்மை என்ன?
உண்மையில், தனது கண்ணில் ஒரு சிறு இரத்தக்குழாய் வெடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே கூலிங் கிளாஸ் அணிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மேக்ரான்.

பிரெஞ்சு ஊடகங்களும், மருத்துவர்கள் சிலரும், இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டாலோ, அல்லது கண்ணை அதிகமாக கசக்கினாலோ கூட இப்படி நடக்கலாம் என கூறியுள்ள நிலையில், எப்படியும் ஒரு முக்கியமான கூட்டத்தில் பங்கேற்கும் தன்னை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பார்கள்.
அப்படி இருக்கும்போது கண்ணில் காயத்துடன் காணப்பட்டால் நன்றாக இருக்காது என்று கருதியே மேக்ரான் கூலிங் கிளாஸ் அணிந்திருக்கலாம், ஒரு ஒரு பிரபலம் அல்லவா என்கிறார் மருத்துவர் ஒருவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |