இங்கிலாந்தில் வாக்கிங் சென்ற நபர் கண்ணில் பட்ட திகில் காட்சி: பலியான இருவர் யார்?
இங்கிலாந்தில், தன் நாயுடன் வாக்கிங் சென்ற ஒருவர் கண்களில் பட்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள Dorset என்ற இடத்தில் அமைந்துள்ளது Bothenhampton தேசிய பூங்கா.
அப்பகுதியில் தனது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்திருக்கிறார் ஒருவர். அப்போது, ஒரு மரத்தில் இரண்டு பேர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதைக் கண்ட அவர், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில், உயிரிழந்தவர்கள், Jack Williams (18) மற்றும் Katherine Powell (17) என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவருக்குமே வேலை கிடைக்காமலிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் நிலையில், வேலையின்மைதான் அதற்கான காரணமா என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.