கண் பார்வை அதிகரித்து தலைவலி வருவதை தடுக்க... எளிய உணவுகள் இதை சாப்பிடலாம்
முன்பெல்லாம் கண்பார்வை கோளாறு, மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை எல்லாம் வயதானவர்களுக்கு தான் ஏற்படும்.
ஆனால் இப்போதெல்லாம் 5 வயது சிறுவர்கள் கூட மூக்கு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் அமர்ந்திருப்பது, செல்போனை நோண்டி கொண்டிருப்பது, சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் கண்களில் பிரச்சனை ஏற்படுகின்றது.
கண்பார்வை எப்போதும் பிரகாசமாக இருக்கவும், மூக்கு கண்ணாடியில் இருந்து விடுதலை பெறவும், கண் பிரச்சனையால் ஏற்படும் ஒற்றை தலைவலியில் இருந்து தப்பிக்கவும் சில எளிய இயற்கை மருத்துவங்கள் உள்ளது.
சோம்பு, பாதாம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்குமுன், பாலில் ஒரு தேக்கரண்டி இந்த பவுடரைக் கலந்து பருகுங்கள்.
நன்மைகள்: கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கேட்ராக்ட் பிரச்சனை எதுவாக இருந்தாலும், 40 நாட்கள் இந்த செய்முறையை பின்பற்றி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
கீரைகள் என்றாலே கண்களின் ஆரோக்கியத்திற்கான மிகச் சிறந்த உணவு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையும்,பொன்னாங்கண்ணிக்கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும்.
நன்மைகள்: கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் கிடைக்கும், கண்பார்வை திறன் அதிகரிக்கும்.
கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் நிரம்பியுள்ளன.
நன்மைகள்: கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உறுதுணையானது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் நிரம்பியுள்ளன. இது உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.
நன்மைகள்: கண்களில் வறட்சித் தன்மை வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், அதுமட்டுமின்றி கண்புரை நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளவும் மீன்களில் உள்ள இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு உதவுகிறது.