புருவ முடி வளர்ச்சி குறைவா இருக்கா? அடர்த்தியாக வளர சூப்பர் டிப்ஸ்
சிலருக்கு கண் புருவம் மிகவும் மெலிதாக இருக்கும்! அது அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள்.
சில இயற்கை பொருட்களை வைத்தே புருவ முடியை அடர்த்தியாக வளர வைக்க முடியும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது விரைவில் முடி வளர உதவும்.
halohair
வெங்காயச் சாறு
வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் முடி வளர்வதை விரைவில் நம்மால் காணமுடியும்.
பால்
பாலைப் பஞ்சால் தொட்டுத் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்துவர புருவ முடி சீராக வளரும்.
வெந்தயம்
வெந்தயம் 1/2 தேக்கரண்டி எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து புருவ முடியில் தடவி கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். வெந்தயத்தில் உள்ள நிக்கோட்டினிக் ஆசிட், புரோட்டீன் இருப்பதால் புருவ முடியை அடர்த்தியாக வளர வைக்க உதவுகிறது.
theindianmed

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.