கண்களை சூடாகாமல் குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி? எளிதான டிப்ஸ்
சந்தோஷம் துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்களை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்வது அவசியமாகும். கண்கள் சூடாகாமல் குளிர்ச்சியாக இருந்தாலே கண் தொடர்பான பல பிரச்சினைகள் வராது.
கண்களை குளிர்ச்சியாக்குவது எப்படி?
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.
தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.