அலாஸ்காவில் F-35 போர் விமான விபத்து: 50 நிமிடங்கள் போராடிய பைலட்
அமெரிக்க விமானப்படையின் F-35 போர் விமானம் அலஸ்க்காவின் Eielson விமான தளத்தில் விபத்துக்குள்ளானது.
200 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த போர் விமானம் முற்றிலுமாக அழிந்தது.
அதில் இருந்த பைலட் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கும் சக்கரம் (Landing Gear) இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
அதனை இறக்க முயன்றபோது முன் சக்கரம் தவறான கோணத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் விமானத்தின் கணினி அமைப்புகள் விமானம் தரையில் இருப்பதாக புரிந்துகொண்ட பல்வேறு செயலிழப்புகளை ஏற்படுத்தியது.
பைலட், வழக்கமான சோதனை பட்டியல்களில் தீர்வு கிடைக்காததால், Lockheed Martin நிறுவனத்தின் 5 பொறியாளர்களுடன் 50 நிமிடங்கள் விமானத்தில் இருந்தபடியே தொலைபேசியில் ஆலோசனை செய்தார்.
இதில் landing gear நிபுணர்கள் பறக்கும் பாதுக்காப்பு பொறியாளர் மற்றும் மூத்த மென்பொருள் பொறியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
விசாரணையில், F-35 விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகளில் பனி உருவானது என்பதே முக்கிய காரணம் என தெரியவந்தது. இது லெண்டிங் கியர் செயலிழப்புக்கு காரணமாக அமைந்தது.
விமானம் நேராக கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-35 crash Alaska 2025, Lockheed Martin jet failure, Eielson Air Force Base incident, F-35 hydraulic icing issue, fighter jet emergency landing, pilot ejects F-35 malfunction, airborne call Lockheed engineers, US Air Force accident report, nose gear jam F-35, military aircraft crash video