பண்டமாற்று முறைக்கு திரும்பும் பிரான்ஸ் - ஜேர்மனி: ஜனாதிபதி மேக்ரான் புதிய திட்டம்
ஜேர்மனி மின்சாரம் வழங்க தயாராக இருக்க பிரான்ஸ் ஜேர்மனிக்கு எரிவாயுவை வழங்கும்
ஐரோப்பிய நாடுகளில் இருந்து தங்களுக்கு மின்சாரம் தேவை என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
உக்ரைன் மீதான ரஷ்ய போரினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி சிக்கலுக்கு தீர்வாகும் புதிய திட்டத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முன்வைத்துள்ளார்.
அதில், ஜேர்மனி மின்சாரம் வழங்க தயாராக இருக்க பிரான்ஸ் ஜேர்மனிக்கு எரிவாயுவை வழங்கும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். இதனிடையே, முதன்மை விநியோக பாதை வழியாக எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்தியதை அடுத்து திங்களன்று ஐரோப்பா எரிவாயு விலைகள் அதிகரித்தன, பங்கு விலைகள் சரிந்தன, யூரோ மதிப்பு சரிவை எதிர்கொண்டது.
@getty
மட்டுமின்றி, குளிர் காலம் நெருங்கி வருவதால் இது தொடர்பான சிக்கலை 27 ஐரோப்பிய நாடுகளும் துரிதமாக செயல்பட்டு தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்த நிலையிலேயே, ஜேர்மனிக்கு தங்கள் எரிவாயு தேவைப்படும் எனவும், ஆனால் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து தங்களுக்கு மின்சாரம் தேவை என்பதை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சேன்சலர் Olaf Scholz உடன் தொலைபேசி உரையாடலை முடித்த பின்னர் மேற்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேக்ரான் குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
@reuters
எதிர்வரும் வாரங்களில் ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கும் திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கு தேவையான மின்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் இருந்து வாங்குவதே முறையான நடவடிக்கை எனவும், சர்வதேச நாடுகளை அணுகுவது தற்போதைய சூழலில் தேவை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.