இரட்டை தாடை உங்க முகத்தையே அழகற்றதாக காட்டுதா? உடனே இதை செய்து பாருங்க
Tomato
Broccoli
Skin Care
By Kirthiga
பொதுவாகவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் வயது போனவர்களுக்கும் இரட்டை தாடையானது உடனே வரும்.
இது ஏற்படுவதால் முகத்தின் தோற்றத்தையே முற்றிலும் மாற்றிவிடும். இதை எப்படி தடுப்பது ஏன் இது ஏற்படுகின்றது என்று தெரியுமா? அதற்கு ஒரு சில டிப்ஸ் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ள போகின்றோம்.
இரட்டை தாடை வருவதற்கு காரணம்
இரட்டை தாடையானது கழுத்தின் அடிப்பகுதியில் கொழுப்பு படிந்திருப்பதாகும். இதற்கு முக்கியமாக மரபணு பிரச்சினைகள் மற்றும் வயதாகுதல் போன்ற காரணங்களாலும் இருக்கின்றது.
இவ்வாறு படிந்துள்ள இந்த கொழுப்பை எவ்வாறு நீக்கி முகத்தை அழகாக கொண்டு வரலாம் என்று யோசித்துக்கொண்டு இருகின்றீர்களா?
இதற்கு ஒரே வழி தினசரி உங்கள் உணவில் இதையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொழுப்பை கரைக்கக் கூடிய உணவுகள்
-
ஒரு நாளையில் 3 முறையாவது தக்காளி ஜூஸ் குடித்து வருவதன் மூலம் உடல் எடையானதும் குறையும், முகத்தில் உள்ள கொழுப்பும் குறையும்.
- பிரக்கோலியை சாலட், சூப்கள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் கொழுப்பு குறைக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
- தினமும் வெறும் வயிற்றில் 1 தே.கரண்டி தேங்காய் எண்ணெய்யை குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
- சியா விதைகளை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, பின் அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
-
3-4 கிராம் பட்டை பொடியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது.
- கீரின் டீயை அடிக்கடி குடித்து வந்தாலும் முகத்தில் உள்ள கொழுப்பானது குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US