முகத்தில் உள்ள கருமையை நீக்கி அழகான சருமத்தை பெற வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள் !!
beauty tips
home remedies
By Kishanthini
வெயிலில் சுற்றி முகம் மற்றும் கை, கால்களின் நிறம் கருமையாகியிருக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தத்தில் இருப்பதாலும், சருமம் பொலிவிழந்து ஒருவித சோர்வுடன் காணப்படும்.
பொதுவாக இப்படி முகம் பொலிவிழந்து கருமையாக காணப்பட்டால், அழகு நிலையங்களுக்கு சென்று ப்ளீச்சிங் செய்வோம். இருப்பினும் இது தற்காலிகமாக தான் செயற்படும்.
ஆனால் சருமத்தின் பொலிவு மற்றும் நிறத்தை அதிகரிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஒருசில பொருட்களை போட்டு வந்தால், சருமத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்கி பளபளப்பை தரும் ஒரு சில அழகு குறிப்புகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- பாதாம் எண்ணெய்யில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
- வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சமஅளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.
- பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.
- நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.
- புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.
- இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US