Face ID With Mask! iPhoneல் வந்த சூப்பரான புதிய அப்டேட்- பயன்படுத்துவது எப்படி?
கோவிட்-19 சூழலில் பயனர்களின் பாதுகாப்பைபி பற்றி சிந்தித்துள்ள Apple நிறுவனம், சில iPhone மொடல்களில் புதிய அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.
உலகமே கொடிய வைரஸான கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து தொடர்ந்து மூன்றாவது வருடமாக போராடிவருகிறது. தடுப்பூசிகள் போடத்தொடங்கியதை அடுத்து பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டாலும், தளத்தப்பட்டாலும், மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக முகக்கவசம் அணியவேண்டிய சூழலில் உள்ளனர். பெரும்பாலான நாடுகளில் முகக்கவசம் என்பது தொடர்ந்து கட்டாயமாக உள்ளது.
இந்த நிலையில், முகக்கவம் அணியும் காரணத்தினால் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சிறுசிறு பிரச்சினைகளை கடந்து செல்கின்றனர். இந்த சிறிய பிரச்சினைகளில் ஒன்று, நமது மொபைல் போனில் Face Id பயன்படுத்த முடியாதது.
Photo: Getty Creative
பலரும் தங்கள் மொபைல் போனில் சில முக்கிய செயலிகளுக்கு Face Id unlock கொடுத்து வைத்திருக்கின்றனர். கொரோனா வருவதற்கு முன், இப்படி ஒரு சிக்கல் வரும் என யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. இப்போது, நம் நினைத்த நேரத்தில் நனைத்து மொபைல் போனில் Face Id unlock-ஐ பயப்படுத்தமுடிவதில்லை, ஏனெனில் பொது இடங்களில் பெரும்பாலும் எல்லா சூழலிலும் நாம் முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
செல்போனில் Youtube வீடியோ பார்ப்பீர்களா? அப்போ இது உங்களுக்கு தான்
இந்நிலையில், Apple நிறுவனம் தனது பயனர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தங்குதடையின்றி Face Id unlock-ஐ பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. இது சில மோதல்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டாலும், இது நல்ல முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட மொடல்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
PC:TNW
முகக்கவசத்துடன் Face ID செயல்பட என்ன செய்யவேண்டம்?
இந்த அம்சம் செயல்பட, உங்கள் ஐபோனில் iOS 15.4 உள்ளதா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும், பின்னர் உங்கள் ஐபோன் settings-ல் உள்ள "Face ID and Passcode" ஆப்ஷனுக்குள் என்று அங்கு நீங்கள் அம்சத்தை இயக்கலாம் மற்றும் முடக்கலாம்.
இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும், முகக்கவசம் அணிந்துகொண்டு உங்கள் ஃபேஸ் ஐடியை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
அம்சம் சரியாக வேலை செய்ய பயனர்கள் முகக்கவசத்தை சரியாக அணிய வேண்டும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.