பயன்படுத்தபட்ட முக கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர்கள் தயாரிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
தைவானில் பயன்படுத்த பட்ட முக கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் உள்ள உள்ள செல் போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமே இந்த அசத்தலான செயலை செய்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க பயன்படுத்திய பின் குப்பையில் வீசப்படும் முகக்கவசங்களால் உலகமே சுற்றுசூழல் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு குப்பையில் வீசப்படும் முகக்கவசம் மாக்குவதற்கு 450 ஆண்டுகள் பிடிக்கும் என்று போஷன் ஆசியா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தைவான் நிறுவனம் ஒன்று அதற்க்கு தீர்வினை கண்டுபிடித்துள்ளது.
தைபே நகரத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர் பாகங்களை தயாரித்து அசத்திவருகிறது.
பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை துண்டுகளாக்கி பிளாஸ்டிக் குழaம்புடன் சேர்த்து செல்போன் சார்ஜர்களின் மேல்பாகங்களை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
முதல்கட்டமாக 10,000 பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சேகரித்து அவற்றை சுத்தப்படுத்தி அவற்றை துண்டுகளாக்கி கட்ச பொருட்களுடன் சேர்த்து சுமார் 40,000 வயர் லேஸ் செல்போன் சார்ஜர்களை தயாரித்துள்ளது அந்நிறுவனம்.