முகத்தை பளிச் என்று மாற்ற வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்
பொதுவாக பூக்கள் பல்வேறு மருத்துவ தன்மைகளைக் கொண்டவை. இவை எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், இயற்கையான அழகைக் கொடுக்கக்கூடியவை.
அதிலும் பூக்கள் சரும அழகிலும் பெரிதும் உதவி புரிகின்றது. அதிலும் பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த பேஸ் பேக், சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், பளிச் என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும்.
அந்தவகையில் தற்போது ஆவாரம் பூவை கொண்டு எப்படி எளியமுறையில் முகத்தை எப்படி அழகுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- ஆவாரம் பூ - 15
- அரிசி மாவு - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- ரோஜா பன்னீர் - தேவையான அளவு
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும்.
இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.
வெயிலில் செல்வதால் கருத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும்.