கறுப்பினத்தவரை 'குரங்குகள்' என அடையாளம் கண்ட Facebook! மன்னிப்புக் கேட்டு நடவடிக்கை
கறுப்பினத்தவர்களை குரங்குகள் என அடையாளம் கண்டதாக எழுந்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
சமீபத்தில், பிரித்தானிய பேஸ்புக் பக்கத்தில் கறுப்பின மனிதர்களைக் கொண்ட வீடியோவின் கீழ், "மேலும் ப்ரைமேட்ஸ் பற்றிய வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறீர்களா" என காண்பித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து Facebook நிறுவனம், அதன் தலைப்புப் பரிந்துரைகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை ரத்து செய்துள்ளது.
அந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பில் இருக்கும் முக அடையாள அம்சம், காணொளி ஒன்றில் இருந்த கறுப்பினத்தவர்களை தவறுதலாகக் குரங்குகள் (Primates) என்ற தலைப்பின் கீழ் சேர்த்துவிட்டது.
அதனையடுத்து, Facebook நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் அந்தத் தவறை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என கூறி, அதுபோன்ற பரிந்துரைகளைச் செய்துகொண்டிருந்த மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறினார்.
அதோடு, Facebook நிறுவனம் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
அதுபோன்ற மென்பொருள், வெள்ளையினத்தைச் சேராதவர்களின் அடையாளத்தைச் சரிவரக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால் அதனை மனித உரிமை ஆர்வலர்கள் குறைகூறியுள்ளனர்.