இந்திய ஹேக்கரை பாராட்டி பரிசளித்த Facebook! அப்படி என்ன செய்தார்?
இன்ஸ்டாகிராமில் இருந்த பிழையை (Bug) கண்டுபிடித்து சொன்னதற்காக இந்திய ஹேக்கர் ஒருவரை பாராட்டி பேஸ்புக் நிறுவனம் பரிசளித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் தீங்கிழைக்கும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்காக பேஸ்புக் நிறுவனம் Mayur Fartade எனும் ஒரு இளம் இந்திய ஹேக்கருக்கு 30,000 டொலர் (ரூ. 22.24 லட்சம்) பரிசாக வழங்கியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிழை, இன்ஸ்டாகிராமில் பிரைவேட் ப்ரொஃபைலாக (Private Profile) இருந்தாலும், பயனரைப் பின்தொடராமல் அவர்களின் காப்பகப்படுத்தப்பட்ட இடுகைகள் (Archived Post), ஸ்டோரீஸ், ரீல்ஸ் மற்றும் IGTV ஆகியவற்றை எளிதாக காண அனுமதித்தது.
பேஸ்புக் இப்போது இந்த பிரச்சினையை சரிசெய்துவிட்டது. ஆனால், இந்த bug அப்படியே இருந்திருந்தால், ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை follow செய்யாமலே சட்டவிரோதமாக அணுக அனுமதிக்கும்.
ஏப்ரல் 16 அன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிழை பவுண்டி திட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. பிழையைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கோரி மூன்று நாட்களுக்குப் பிறகு மயூர் ஃபார்ட்டேக்கு பேஸ்புக் பதிலளித்தது.
பிறகு இந்த பிரச்சினை ஜூன் 15 அன்று தீர்க்கப்பட்டது. இந்த பிழையைக் கண்டறிந்த Mayur Fartade-க்கு பேஸ்புக் நன்றி தெரிவித்துள்ளது.
C++ மற்றும் பைதான் ஆகியவற்றில் திறமையான மயூர் ஃபார்டேட், இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் சோலாப்பூர் நகரத்தை சேர்ந்தவர் என்வைத்து குறிப்பிடத்தக்கது