பேஸ்புக் ஏன் நீல நிறத்தில் உள்ளது தெரியுமா? நம்பமுடியாத ஒரு ஆச்சரிய காரணம்
பேஸ்புக் சமூகவலைதளம் கடந்த 2004ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்டது.
தற்போது பேஸ்புக்கை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டியுள்ளது.
இந்த ஃபேஸ்புக் வலைத்தளம் ஏன் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதென நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இதற்கு ஒரு ஆச்சரிய காரணம் உள்ளது, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வண்ண குருட்டுத்தன்மை கொண்ட மனிதர். அதாவது, அவருக்கு colour blindness பிரச்சினை அவருக்கு இருக்கிறதாம்.
அவருக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் விளங்காது. அதாவது அந்த வண்ணங்களுடன் வேலையை செய்வது அவருக்கு கடினமாக இருந்தது.
இது பெரும்பாலும் தாயிடமிருந்து பெறக்கூடிய ஒரு மரபணு குறைபாடாகும். மார்க் ஸக்கர்பெர்க் சிறப்பாகக் காணும் நிறம் நீலமாக இருந்துள்ளது.
இதனால் தான் நீல நிறத்திற்கு மார்க் டவுள் ஓகே சொல்லியிருக்கிறார்.