பேஸ்புக் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை; யார் யாருக்கு கிடைக்கும்?
நீங்கள் பேஸ்புக் பயனாளியா? அப்படியானால், ஃபேஸ்புக் வழங்கும் இழப்பீட்டில் ஒரு பங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அமெரிக்க பயனர்களுக்குக் கிடைக்கும்.
கடந்த ஆண்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பான வழக்கைத் தீர்ப்பதற்காக 725 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 24,000 கோடி) செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
ஆகஸ்ட் 25-க்கு முன் ஆன்லைனில் க்ளைம் செய்பவர்களுக்கு இந்தத் தொகையில் பங்கு கிடைக்கும்.
மே 24, 2007 முதல் டிசம்பர் 22, 2022 வரை பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
செட்டில்மென்ட் பணத்தின் எந்தப் பங்கை நுகர்வோர் பெறுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மொத்தத் தொகையை அனைவருக்கும் பிரித்து கொடுக்கும்போது அவர்களுக்கு சமமான பங்கு கிடைக்கும் என்பது தகவல். ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் குறைந்த அளவுதான் கிடைக்கும்.
Meta
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தொடர்பான வழக்கு 2018-ல் தொடரப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரம் தொடர்பாக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் 8.7 கோடி பேரின் தகவல்களை பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிக்டாக் போன்ற சேவைகளுக்கு அதிகமான மக்கள் ஈர்க்கப்படுவதால் facebook வளர்ச்சி ஸ்தம்பித்தது. ஆனால் facebook இன்னும் உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது, அமெரிக்காவில் 250 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Facebook Lawsuit Settlement Claim, How to get your share of Meta's 725 million privacy settlement, Can You Get Some of Facebook's 725M USD Settlement?, Who gets Facebook's 725M USD Settlement, FB 725 million USD privacy settlement