ஆங்கிலத்தில் மோசமான அர்த்தம் தரக்கூடிய பெயரையுடைய பிரான்ஸ் நகரம்... தவறுதலாக பேஸ்புக் எடுத்த நடவடிக்கை
பிரெஞ்சு நகரம் ஒன்றின் பெயரை அந்த நகரத்தில் பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம். பெண்களை அவமதிக்க பயன்படுத்தும் ஒரு ஆங்கில வார்த்தையின் பொருளில் அந்த நகரத்தின் பெயர் இருப்பதால், தவறுதலாக அந்த பெயரை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
அந்த நகரத்தின் பெயர் பேஸ்புக் விதிகளை மீறுவதாக உள்ளதால், இனி ஒன்லைனில் அந்த நகரத்தின் பெயர் இருக்காது என நகர மேயருக்கு செய்தி அனுப்பியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
பிரெஞ்சு மொழியில் அந்த வார்த்தைக்கான் அர்த்தம் வேறு என்பது தெரியவந்த நிலையில், பின்னர் நகர மேயரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்ட பேஸ்புக் நிர்வாகம், மீண்டும் அந்நகரத்தின் பக்கத்தை இணையத்தில் காணலாம் என்று உறுதியளித்துக்கொண்டுள்ளது.
அந்த நகரத்தின் பெயர் Bitche என்பது குறிப்பிடத்தக்கது!