இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் முடக்கம்: சில மணிநேரங்களில் 200 பில்லியன் டொலர் இழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் Facebook, WhatsApp, Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால், சில மணிநேரங்களில் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், Messengerஆகிய சமூக வலைதளங்கள் இயங்கவில்லை. இந்த அனைத்து பயன்பாடுகளும் பேஸ்புக்கிற்கு சொந்தமானது மற்றும் பகிரப்பட்ட உள்கட்டமைப்பில் இயங்குகிறது.
இந்த முடக்கம் நெட்வொர்க்கிங் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மில்லியன் கணக்கான இணையவாசிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Picture: Sopa
அதேநேரம், இந்த இந்த முடக்கத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்கு இதுவரை சுமார் 50 பில்லியன் டொலர் இழப்பும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) Mark Zuckerberg-க்கு 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மேலும் இந்த இழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இணையத் தடைகள் மற்றும் அவற்றின் தாக்கத்தை கண்காணிக்கும் NetBlocks கூறுகையில், இந்த முடக்கம் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்தில் 160 மில்லியன் டொலர் (117 மில்லியன்பவுண்டுகள்) இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பக்கம் முடங்கியது குறித்து ட்விட்டரில் பக்கத்தில் பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் எல்லாவற்றையும் சரி செய்ய முயன்று கொண்டிருப்பதாகவும், விரைவில் அப்டேட் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.