2021ம் ஆண்டின் மோசமான நிறுவனமாக பேஸ்புக் தேர்வு! சிறந்த நிறுவனம் எது தெரியுமா?
2021ம் ஆண்டின் மோசமான நிறுவனத்துக்கான ( Worst Company of 2021) வாக்கெடுப்பில் மெடா (Meta) (பேஸ்புக்) முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கிய நிலையிலேயே மோசமான நிறுவனமாக தேர்வாகியுள்ளது.
யாகூ ஃபினான்ஸ் இணையதளம், ’2021ம் ஆண்டின் மோசமான நிறுவனம்’ தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 1,541 பேர் வாக்களித்தினர்.
இதில், சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் 2ம் இடத்தை பிடித்தது. அலிபாபாவை விட 50 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்று மிக மோசமான நிறுவனமாக ஃபேஸ்புக் முதலிடம் பிடித்தது.
மறுபுறம், சிறந்த நிறுவனமாக மைக்ரோசாஃப் (Microsoft) தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது