பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு $10 பில்லியன் இழப்பு! வெளியான காரணம்
ஆப்பிள் நிறுவனம் புதிய பிரைவசி மாற்றத்தை கொண்டு வந்த பின்னர் அதன் காரணமாக பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கிட்டத்தட்ட $10 பில்லியன் பண இழப்பை சந்தித்துள்ளன.
ஆப்பிள் ஆப் புதிய டிராக்கிங் டிரான்ஸ்பரன்சி பாலிசியின் படி, பயனர்கள் தங்கள் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்க அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் .
இதன் காரணமாக ஸ்னாப்சாட், பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாடுகளுக்கு கிட்டத்தட்ட $10 பில்லியன் வருவாய் செலவாகும் என்று ஒரு ஆன்லைன் அறிக்கை கூறுகிறது.
பேஸ்புக் அதன் அளவு காரணமாக மற்ற சமூக தளங்களுடன் ஒப்பிடும் போது முழுமையான வகையில் அதிக பணத்தை இழந்துள்ளது. பயனாளர்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிப்பது தொடர்பான முடிவுகள் அவர்களிடமே இருக்கும் என்பது ஆப்பிள் ஆப்ஸின் புதிய டிராக்கிங் டிரான்ஸ்பரன்சி பாலிசியில் உள்ளது.
மேலும் அதில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்கு பயன்படுத்தலாமா என்பதையும் பயனாளர்களே முடிவு செய்யலாம்.
இதன் காரணமாகவே முன்னணி சமூக ஊடகங்கள் இந்த இழப்பை சந்தித்துள்ளன. இது தொடர்பாக தரவுகளை சேகரிக்கும் நிறுவனமான Lotameவின் COO Mike Woosley கூறுகையில், ஆப் ட்ராக்கிங்கின் புதிய கொள்கையின் விளைவாக iPhone பயனர்களுக்கு குறைவான விளம்பர முடிவுகள் தான் காண்பித்தன, இது இழப்புக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இது தொடர்பாக கூறுகையில், ஆப்பிள் கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்களால் பேஸ்புக் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான சிறு வணிகங்களையும் அது பாதிக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.