வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வராமல் தவிர்க்க உதவும் Facepack: எப்படி தயாரிப்பது?
வயது ஆக ஆக முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், வயதானாலும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க உதவும் Facepack குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை வெள்ளைக்கரு- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதன்பின் கலவையை எடுத்து முகத்தில் முழுவதும் சமமாக தடவ வேண்டும். கண் பகுதியைத் தவிர்க்க வேண்டும்.
பின்னர் முகத்தை சுத்தம் செய்து இந்த கலவையை முகத்தில் சமமாக தடவ வேண்டும்.
இதற்கடுத்து 20 நிமிடங்கள் நன்கு உலர விட்டு அதன்பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
2. தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- வெள்ளரிக்காய் விழுது- ½ ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் விழுது மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
பின் சருமத்தை கழுவி இந்த கலவையை முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் உலர விடவும்.
அதன்பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கவும்.
3. தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1 தேன்- 1 ஸ்பூன் தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்கு மசித்து தேன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் முகத்தை நன்கு சுத்தம் செய்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவவும்.
சுமார் 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலர விட்டு அதன்பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கிளறவும்.
பின் முகத்தை கழுவி இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் சமமாகப் பயன்படுத்தவும்.
அடுத்து இதனை 30 நிமிடங்கள் உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
5. தேவையான பொருட்கள்
- காபி பவுடர்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய், தேன், காபித் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு முகத்தில் நன்கு தடவி கலவையை வட்ட இயக்கங்களில் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
அடுத்து இதை சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |