யானைகள் இப்படியும் நடந்துகொள்ளுமா? ஆச்சரியமூட்டும் சில சுவாரஸ்யங்கள்
நிலத்தில் வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரிய விலங்காக விளங்குவது யானை தான். இந்த யானைகளுக்கான ஒரு நாளாக இருப்பது ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதியாகும்.
இந்த நாளின் நோக்கமாக இருப்பத யானைகளை பாதுகாப்பதாகும். உலகில் இருக்கக்கூடிய யானைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
1.ஆப்பிரிக்க யானைகள்
2. ஆசிய யானைகள்
இந்த ஆசிய யானைகள் இந்தியா மற்றும் இலங்கை உட்பட 13 நாடுகளில் வசிகின்றது. ஆசிய யானைகள் 10 அடியில் வளரக்கூடியது. இதன் எடை 7 டன் அளவு வரையில் இருக்கும்.
பண்டைய காலத்தில் போர் களத்திற்கம் கோயிலுக்கு முக்கிய பங்கு வகித்தது இந்த யானைகள் தான்.
இந்த யானைகள் ஒவ்வொன்றிற்கும் அதை சார்ந்த குணாதிசயங்கள் பல இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
- ஒரு யானை தினசரி 200 முதல் 250 கிலோ வரை உணவை உட்கொள்ளும்.
- ஒரு நாளில் 100 முதல் 105 லீற்றர் வரை நீர் அருந்தும்.
-
ஆசியாவிலே மிகப்பெரிய யானைகள் இலங்கை யானைகள் தான்.
-
யானையின் தும்பிக்கைகளில் 40,000 திற்கும் மேற்பட்ட தசைகள் இருக்கிறது.
-
காட்டில் இருக்கும் யானைகள் 60 முதல் 70 வயது வரை வாழும்.
-
யானைகளுக்கு உண்மையிலே நியாபக சக்தி மிக அதிகம்.
மேலும் யானைகள் பற்றி சுவாரஸ்யமான தகவலை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |