ஜேர்மன் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யும் அழகிய இளம்பெண்கள்
ஜேர்மன் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்காக அழகிய இளம்பெண்கள் சிலர் பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன.
பிரச்சாரம் செய்யும் அழகிய இளம்பெண்கள்
அந்த அழகான இளம்பெண்கள், வலதுசாரிக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்.
யார் அவர்கள் என்று உற்றுப்பார்த்தால் தெரிகிறது, அவர்கள் உண்மையான பெண்கள் அல்ல. அவை, AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உருவங்கள் மட்டுமே.
ஆக, தேர்தல் பிரச்சாரத்தில் இந்த AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பெண்கள் பயன்படுத்தப்படும் நிலையில், அது தேர்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த AI பெண்கள், புலம்பெயர்தலுக்கு எதிராகவும், வலதுசாரியினருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.
புலம்பெயர்ந்தோர் முரட்டுத்தனமானவர்கள் என்றும், வெளிநாட்டவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் என்னும் ரீதியிலும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
பேசுபவர்கள் அழகான இளம்பெண்கள் என்பதால் அவர்கள் கூறுவதை மக்கள் உற்றுக் கவனிக்கக்கூடும் என்றும், பேசுபவர் யார் என்பதை விட அவரது கருத்துக்கள் வலுவானவையாக இருப்பதால், அவை மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் சிலர்.
சிலர், இந்த வீடியோக்களை உற்று கவனித்தாலே அவை போலியானவை என தெரிகிறது. ஆகவே, அவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள்.
ஆக, இந்த AI பெண்களும் வீடியோக்களும் வரும் பொதுத்தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |