இனி சமூகவலைத்தள கணக்குகளை ஆய்வு செய்யும் வருமான வரித்துறை? அரசு விளக்கம்
இனி பொதுமக்களின் சமூகவலைத்தள கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்யும் என வெளியான தகவலுக்கு அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகுவிப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அவ்வப்போது சிலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவது உண்டு.

இந்த சோதனையின் போது, அந்த நபரின் வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்களை சோதிப்பது உண்டு.
ஈமெயில் கணக்குகளை ஆய்வு செய்யும் ஐ.டி?
இந்நிலையில், வரும் 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் வருமான வரி மசோதா 2025 வின் படி, வரி ஏய்ப்பை தடுக்க பொதுமக்களின் ஈமெயில் மற்றும் சமூகவலைதள கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூகவலைதங்களில் தகவல் வெளியானது.
இந்த தகவல் வைரலாக பரவி வரும் நிலையில், மத்திய அரசின் PIB தகவல் சரிபார்ப்பகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.
A post by @IndianTechGuide claims that from April 1, 2026, the Income Tax Department will have the 'authority' to access your social media, emails, and other digital platforms to curb tax evasion.#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) December 22, 2025
❌The claim being made in this post is #misleading! Here’s the real… pic.twitter.com/hIyPPcvALF
இந்த தகவலை மறுத்துள்ள PIB தகவல் சரிபார்ப்பகம், வருமான வரிச் சட்டம், 2025 இன் பிரிவு 247 இன் கீழ் ஒரு நபர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என சோதனை நடத்தப்படும் போது மட்டுமே அத்தகைய கணக்குகளை வருமானவரித்துறையினர் அணுக முடியும்.
பொதுமக்கள் அனைவரின் ஈமெயில் மற்றும் சமூகவலைதள கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், வழக்கமான தகவல் சரிபார்ப்பு அல்லது ஆய்வின் கீழ் உள்ள வழக்குகளுக்கு கூட பிரிவு 247-ஐ பயன்படுத்தி சமூகவலைதள கணக்குகளை சோதனையிட முடியாது. பெரிய அளவிலான வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் சோதனையின் போது மட்டுமே இந்த பிரிவு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |