Fact check: இன்று சந்திர கிரகணத்தால் Whatsapp இயங்காது என்பது உண்மையா?
இன்று சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.
அதன் கதிர்வீச்சு தாக்கத்தால் வாட்ஸ் அப் இயங்காது என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென வாட்ஸ் அப் சேவை முடங்கியது. அதாவது அக்டோபர் 25ஆம் திகதி உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்தனர்.
வாட்ஸ் அப் முடங்கிய அன்றைய தினம் சூரிய கிரகணமாக இருந்ததால் சூரியனிலிருந்து வந்த கதிர்வீச்சு காரணமாக வாட்ஸ் அப் முடங்கியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
zeebiz
பின்னர் சூரிய கிரகணம் முடிவடைந்த சிறிது நேரத்தில் வாட்ஸ் அப்பும் மீட்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வாட்ஸ் அப் முடங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சந்திர கிரகணம் நிகழ இருக்கும் நிலையில் நேற்று இருந்தே வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று வாட்ஸ் அப் செயல்படாது முக்கியமான தகவல்களை உடனடியாக அனுப்பி விடுங்கள்.
சந்திரனிலிருந்து வெளியாகும் சிகப்பு கதிர்களால் வாட்ஸ் அப் சேவை முடங்கும் என தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் குறித்து Fact check சோதனை செய்தபோது அது பொய்யென தெரியவந்துள்ளது.