பிரித்தானிய அலுவலகமொன்றில் சக ஊழியர்கள் காபியில் வயாகரா மாத்திரைகளைக் கலந்த பெண்...
பிரித்தானிய அலுவலகமொன்றில் நீண்ட காலமாக பணியாற்றிவந்த பெண்ணொருவர், தன் சக ஊழியர்கள் இருவருடைய காபியில் வயாகரா மாத்திரைகளைக் கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சக ஊழியர்கள் காபியில் வயாகரா மாத்திரைகளைக் கலந்த பெண்
இங்கிலாந்தின் டோவரில் அமைந்துள்ள Envirograf என்னும் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றிவந்தவர் Karen Beale (62).

(Image: KMG / SWNS)
அதே அலுவலகத்தில் பணியாற்றிவந்த Katrina Gravenor மற்றும் Jean Smith ஆகியோரின் காபியில் ஏதோ கலந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, Katrina கமெரா ஒன்றை ரகசியமாக பொருத்தியுள்ளார்.

(Image: Getty Images)
கமெரா காட்சிகளை சோதித்தபோது, Karen தன் கையில் கையுறை அணிந்துகொண்டு, காபியில் எதையோ கலக்குவதைக் கண்டுபிடித்துள்ளார் அவர். பரிசோதனையில் காபியில் கலக்கப்பட்டிருந்தது வயாகரா மாத்திரைகள் என்பது தெரியவந்தது. அத்துடன் உயர் கொலஸ்ட்ராலுக்கான மருந்தும் காபியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மறுப்பு
Karen கைது செய்யப்பட்டார், அத்துடன் அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார். ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

(Image: PA)
தனது காபியில் யாரோ எதையோ கலந்துள்ளதாக Katrinaவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே, அதை கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் என தனது மேலாளர் கூறியதாகவும், அதைத்தான் தான் சோதித்ததாகவும் கூறுகிறார் Karen. அத்துடன், அவரது வீட்டை சோதனையிட்டபோது, காபியில் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் எதுவும் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. வழக்கு தொடர்கிறது.

(Image: Getty Images)
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |