ஆர்சிபி கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே நட்சத்திரம் நியமனம்!
2022 ஐபிஎல் தொடருக்கான ஆர்சிபி அணி கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே நட்த்திரம் டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் திகதி வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு கேப்டனாக டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 12 பெங்களூருவில் நடந்த ஆர்சிபி நிகழ்ச்சியில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடிய டுபிளசிஸை, கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 7 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம், கோலி மீண்டும் அணித்தலைவர் பதவிக்கு திரும்புவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அணி கேப்டன் பதவிக்கு டுபிளசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், இருவரையும் ஓரங்கட்டிவிட்டு தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளசிஸ் கேப்டனாகியுள்ளார்.
The Leader of the Pride is here!
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
Captain of RCB, @faf1307! ?#PlayBold #RCBCaptain #RCBUnbox #ForOur12thMan #UnboxTheBold pic.twitter.com/UfmrHBrZcb