CSK வெற்றி! மனைவிக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டுபிளிசிஸ்
ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியை டுபிளிசிஸ் மனைவியுடன் பகிரந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை சென்னை வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சென்னை அணியின் துவக்க வீரரும் டுபிளிசிஸ் தன்னுடைய மனைவிக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் டுபிளிசிஸ் 59 பந்தில் 86 ஓட்டங்கள் குவித்தார்.
அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் டுபிளிசிஸ் 633 ஓட்டங்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் சென்னை அணியின் மற்றொரு துவக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் 635 ஓட்டங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.