லசித் மலிங்காவின் வழிகாட்டுதலில் பும்ரா இன்னும் சிறந்து விளங்கினார்: RCB அணித்தலைவர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவை பாராட்டினார்.
வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது பும்ராவின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
போட்டிக்கு பின்னர் பேசிய பெங்களூரு அணித்தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் தோல்வி குறித்து பேசும்போது, பனி ஒரு காரணியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் 250+ ஸ்கோரை எடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் 196 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திவிட்டனர் என்றார்.
மேலும் பும்ரா குறித்து அவர் கூறுகையில், ''ஒவ்வொரு முறையும் நீங்கள் பும்ராவின் கையில் பந்துடன் அவரைப் பார்க்கும்போது, நீங்கள் அவரை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அவருக்கு பல திறமைகள் உள்ளன.
அழுத்தத்தின் கீழ் நன்றாக பந்துவீசுகிறார். அதே அதிரடியுடன் பந்துவீசுகிறார் மற்றும் நிறைய மாறுபாடுகள் கொண்டவர். லசித் மலிங்காவின் வழிகாட்டுதலின் கீழ் அவர் இன்னும் சிறந்து விளங்குகினார் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்தால் நாங்கள் விரும்பியிருப்போம்'' என தெரிவித்தார்.
T20 Cricket can be cruel! ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 11, 2024
This season has dealt us tough hands, and the heartache is real for both our players and fans. ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #MIvRCB pic.twitter.com/U0SmP7BsAF
The City of D̶r̶e̶a̶m̶s̶ Smiles, quite literally! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #MIvRCB pic.twitter.com/zhR3dBKYeF
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 11, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |