பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு அரியவகை நோய்! அதன் அறிகுறிகள் என்ன?
பிரபல நடிகர் பகத் பாசில் தனக்கு அரியவகை நரம்பியல் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் பகத் பாசில்
மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்து மிரட்டியுள்ளார்.
அதேபோல் தெலுங்கில் இவர் நடித்த பொலிஸ் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் விழா ஒன்றில் தனக்கு உள்ள அரியவகை நோய் குறித்து பகத் பாசில் மனம் திறந்துள்ளார். அவர் ADHD எனும் கவனக் குறைபாடு, Hyperactivity கோளாறை எளிதில் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவர் ஒருவரிடம் கேட்டாராம்.
அதற்கு அவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்று கூறினாராம். இந்த நரம்பியல் தொடர்பான குறைபாடு இருக்கும் ஒருவர் அதிக மறதி கொண்டவர்களாகவும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக கருதாதவர்களாக இருப்பார்களாம்.
ADHD
- Attention-deficit/Hyperactivity disorder என்பதன் சுருக்கமே ADHD ஆகும்.
- கவன பற்றாக்குறை/அதிக செயல்பாட்டுக் கோளாறு என்பது மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலை மற்றும் பெரும்பாலும் முதிர்வயது வரை தொடர்கிறது.
- இந்த நோய் இருப்பதால் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். அதேபோல் அதிவேகத்தன்மை மற்றும் மனக்கிளர்ச்சியான நடத்தை போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளின் கலவையை இந்நோய் கொண்டுள்ளது.
அறிகுறிகள்:
- கவனக்குறைவு மற்றும் விவரங்களுக்கு கவனம் இல்லாமை
- பழைய பணிகளை முடிப்பதற்கு முன் தொடர்ந்து புதிய பணிகளை தொடங்குதல்
- மோசமான நிறுவன திறன்கள்
- கவனம் செலுத்தவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ இயலாமை
- தொடர்ந்து பொருட்களை இழப்பது அல்லது தவறாக வைப்பது மற்றும் மறதி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
இந்த நிலையில் விழா ஒன்றில் தனக்கு உள்ள அரியவகை நோய் குறித்து பகத் பாசில் மனம் திறந்துள்ளார்.
அவர் ADHD எனும் கவனக் குறைபாடு, Hyperactivity கோளாறை எளிதில் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவர் ஒருவரிடம் கேட்டாராம்.
அதற்கு அவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்று கூறினாராம்.
இந்த நரம்பியல் தொடர்பான குறைபாடு இருக்கும் ஒருவர் அதிக மறதி கொண்டவர்களாகவும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக கருதாதவர்களாக இருப்பார்களாம்.
ADHD
Attention-deficit/Hyperactivity disorder என்பதன் சுருக்கமே ADHD ஆகும்.
கவன பற்றாக்குறை/அதிக செயல்பாட்டுக் கோளாறு என்பது மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலை மற்றும் பெரும்பாலும் முதிர்வயது வரை தொடர்கிறது.
இந்த நோய் இருப்பதால் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
அதேபோல் அதிவேகத்தன்மை மற்றும் மனக்கிளர்ச்சியான நடத்தை போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளின் கலவையை இந்நோய் கொண்டுள்ளது.
அறிகுறிகள்:
கவனக்குறைவு மற்றும் விவரங்களுக்கு கவனம் இல்லாமை
பழைய பணிகளை முடிப்பதற்கு முன் தொடர்ந்து புதிய பணிகளை தொடங்குதல்
மோசமான நிறுவன திறன்கள்
கவனம் செலுத்தவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ இயலாமை
தொடர்ந்து பொருட்களை இழப்பது அல்லது தவறாக வைப்பது மற்றும் மறதி