17 ஆண்டுகளான பழைய மொபைலை பயன்படுத்தும் பஹத் பாசில் - அதன் மதிப்பு என்ன தெரியுமா?
நவீன தொழில்நுட்பங்களையும், சமூக வலைதளங்களையும் விலக்கி வாழும் நடிகர் பஹத் பாசில், தற்போது பயன்படுத்தும் மொபைல் போனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் 'Mollywood Times' என்ற படத்தின் பூஜை நிகழ்வில் பங்கேற்ற போது பஹத், தனது கைபேசியில் பேசும் காட்சி ஊடகக் கவனத்தை பெற்றது.
அந்த வீடியோவில் அவர் பயன்படுத்தும் போன் Vertu Ascent Ti என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது ஒரு Basic keypad போன் தான், ஆனால் மிக அழகானதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.
2007-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2008-ல் வெளியான இந்த போன், Titanium, Sapphire Crystal மற்றும் hand-stitched leather போன்ற விலையுயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டது.
அந்நேரத்தில் இந்த போனின் விலை ரூ.5.54 லட்சம் ஆகும். தற்போது தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், சில பழைய விற்பனை தளங்களில் ரூ.1 முதல் 1.5 லட்சம் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் அவர் பயன்படுத்தும் போன் Vertu Ascent Retro Classic என்றும், அதன் விலை $11,920 (ரூ.10.2 லட்சம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-ல் ஆவேஷம், வேட்டையன், பூகெய்ன்வில்லா மற்றும் புஷ்பா 2: தி ரூல் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த பஹத் பாசில், இப்போது தனது 2025-ல் வெளிவரும் மாரீசன் படத்துக்கான காத்திருப்பில் இருக்கிறார். இதில் அவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Fahadh Faasil Vertu phone, Fahadh Faasil old mobile viral, Fahadh Faasil Rs 5.5 lakh phone, Vertu Ascent Ti India price, Fahadh Faasil keypad phone, Actor uses luxury feature phone, Fahadh Faasil phone viral video, Vertu Ascent Retro Classic, Fahadh Faasil tech lifestyle, Fahadh Faasil Maareesan update