திவாலாகி மனைவியின் சம்பளத்தில் வாழ்ந்தவர்... துபாயில் கிடைத்த வாய்ப்பு: இன்று அவரின் நிலை
பெட்ரோகெம் மத்திய கிழக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான யோகேஷ் மேத்தா இரசாயன விநியோகத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர்.
வணிகம் திவாலானது
மும்பையில் உள்ள பாந்த்ரா நேஷனல் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் மேத்தா. அவரது தந்தையின் இரசாயன தயாரிப்பு தொழிற்சாலையிலேயே முதல் முறையாக வேலைக்கு சேர்ந்தார்.
2003 ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ படித்தார். 1990 ல், இந்தியாவில் அவரது இரசாயன விநியோக வணிகம் திவாலானது, அவரை சவாலான நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியது.
இந்த நேரத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த அவரது மனைவி, குடும்பத்தை கவனிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதனிடையே துபாயில், மேத்தா ஒரு புதிய தொடக்கத்தை முன்னெடுத்தார், மேலும் ஒரு நண்பரின் உதவியுடன் பெட்ரோகெம் நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.
1995ல் தமது 35வது வயதில் மேத்தா பெட்ரோகெம் நிறுவனத்தை துபாயில் தொடங்கினார். படிப்படியாக இந்நிறுவனம் பில்லியன் டொலர் நிறுவனமாக பரிணமித்துள்ளது.
துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் மிகப்பெரிய சேமிப்பு முனையத்தை இயக்குகிறது. மட்டுமின்றி 27 நாடுகளுக்கு ஆண்டுதோறும் மூன்று மில்லியன் மெட்ரிக் டன் இரசாயன பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
அதிகமான வருவாய்
மேத்தாவின் தலைமையின் கீழ், பெட்ரோகெம் நிறுவனம் வர்த்தகம் மற்றும் தளவாடங்களில் விரிவடைந்தது, உலகளவில் அலுவலகங்கள் திறக்கப்பட்டதுடன் ஆண்டுக்கு 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டி வருகிறது.
அவரது மகன் ரோஹன் பத்தாண்டுகளுக்கு முன்பு வணிகத்தில் சேர்ந்தார், புதிய ஆற்றலையும் யோசனைகளையும் கொண்டு, நிறுவனத்தை மேலும் பல்வகைப்படுத்தவும், உலகளவில் வளரவும் செய்தார்.
இன்று, ரோஹன் வணிக மேம்பாட்டு இயக்குநராக வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோகெமின் சிறந்த ஆண்டாக 2017 அமைந்துள்ளது, நிறுவனம் 1.1 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியது, இது 2016 ஐ விட 17 சதவிகிதம் அதிகமாகும்.
சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் மேத்தாவின் சொத்து மதிப்பு ரூ 13,062 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |