இணையத்தில் வைரலான போலி ஆப்பிள் கார் வீடியோ; அது 2025-2027க்கு முன் வெளியாக சாத்தியமில்லை என ஆய்வாளர் தகவல்
லிடார் சென்சார் மற்றும் கட்டிங் எட்ஜ் பேட்டரி தொழில்நுட்பம் கொண்ட ஆப்பிள் கார் செயல்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்திய அறிக்கை 2024-ஆம் ஆண்டில் ஆப்பிள் கார் அறிமுகமாகும் என்று பரிந்துரைத்தது.
இருப்பினும், ஆய்வாளர் மிங்-சி குவோ ஆப்பிள் கார் வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் 2025-2027க்கு முன் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்.
ஆப்பிள் கார் விவரக்குறிப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அதன் தற்போதைய வளர்ச்சி அட்டவணை தெளிவாக இல்லை என்றும் குவோ குறிப்பிடுகிறார். இதனால், ஆப்பிள் அதன் மின்சாரக் கார் வெளியீட்டை 2028-க்கு அல்லது அதற்குப் பிறகும் தள்ளிவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், ஒரு போலி ஆப்பிள் காரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
Apple car concept? pic.twitter.com/Tilwr80R6W
— Quinn Miller (@quinnjmiller) December 25, 2020
வீடியோவில், அசாதாரணமான உருண்டை வடிவிலான சக்கரங்களைக் கொண்ட ஒரு கார் ஒரு வாகன நிறுத்துமிடத்தின் அருகே நிற்கிறது, டிரைவர் வெளியேறியதும், அந்த வாகனம் 90 டிகிரியில் தன்னிசையாக திரும்பி பார்க்கிங் செய்துகொள்கிறது.
இந்த வீடியோ உண்மையில் சிஜிஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி என்பதை தி டிரைவ் ஜர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.
போலியாக இருப்பினும், இந்த வீடியோ ட்விட்டரில் மட்டும் 55,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 21,000 ரீட்வீட்களையும் சேகரித்துள்ளது, அதே நேரத்தில் Riovacci என்ற ஒரு டிக்டோக் கணக்கில் 810,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.
ஆப்பிள் கார் சில காலமாக வளர்ச்சியில் உள்ளது. ஆப்பிளின் சொந்த மின்சார காருக்கான திட்டங்கள் 2014 முதல் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த திட்டங்கள் EV இலிருந்து தன்னிச்சையாக செயல்படும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மாறின.
பேட்டரியைத் தவிர்த்து காரில் பல அம்சங்கள் இருக்க வேண்டும். தற்போது ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபாட் 12 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்படும் தூரத்தை ஸ்கேன் செய்யும் லிடார் சென்சார்கள் பயன்படுத்தப்படலாம். இந்த சென்சார்கள் கார்களில் தன்னாட்சி தொழில்நுட்பத்தை இயக்குவதற்கான அடிப்படையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.