உலகக்கோப்பையில் போலி ரசிகர்கள்? பணம் கொடுக்கப்பட்டதா? வீடியோக்களால் வெடித்த சர்ச்சை
கத்தாரில் உலகக்கோப்பை அணிகளை ஆதரிப்பதற்கு போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 20ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் கத்தாரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இந்த நிலையில், தோஹாவில் பல்வேறு அணிகளின் ரசிகர்கள் அணிவகுப்பு நடத்தினர். அப்போது தங்கள் நாட்டின் கொடிகளை அசைத்து ரசிகர்கள் பாடல்களை பாடினர்.
டிக் டாக் சேனல் இதுதொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வந்தது. இந்த வீடியோக்கள் வார இறுதியில் வெளியிடப்பட்டன. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர், கத்தார் அதிகாரிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெவ்வேறு நாடுகளுக்கு ஆதரவாக ஆடை அணிவதற்கு பணம் செலுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினர்.
Ladies and gentlemen ENGLAND fans have arrived in Qatar ??? #BoycottQatar2022 pic.twitter.com/1w0g2Ucq0L
— DRazzle21 (@DRazzle21) November 12, 2022
கேரளாவைச் சேர்ந்த ரசிகர்கள் இங்கிலாந்து ரசிகர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து கூறப்பட்டது. மேலும், ரசிகர்களாக இருப்பதற்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது என சில ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
போலி ரசிகர்கள் அணிவகுப்பு
இதனால், அதிகாரிகள் ரசிகர் அணிவகுப்புகளை நடத்தியிருக்கிறார்களா அல்லது இன்னும் கத்தாரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போட்டிக்கு முன்னதாக உண்மையிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.
Tears not one argentinian spotted ???? pic.twitter.com/6skGtTqnzH
— ?? (@soufp4cked) November 12, 2022
உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், போலி ரசிகர்கள் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.