ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை துணிச்சலாக மடக்கிப்பிடித்த அகதி: ஒரு மோசமான தகவல்

Germany
By Balamanuvelan May 31, 2025 09:39 AM GMT
Report

ஜேர்மனியில், புலம்பெயர்ந்தோர் தாக்குதல் நடத்தும் விடயங்கள் சமீப காலமாக தலைப்புச் செய்திகளாகிவரும் நிலையில், கத்தித் தாக்குதல் நடத்தி 18 பேரை காயப்படுத்திய ஜேர்மன் பெண்ணொருவரை துணிச்சலாக மடக்கிப் பிடித்த அகதி ஒருவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.

18 பேரை காயப்படுத்திய ஜேர்மன் பெண் 

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை துணிச்சலாக மடக்கிப்பிடித்த அகதி: ஒரு மோசமான தகவல் | Fake Image Spread Of Hamburg Attack Syria Refugee

கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் 39 வயதுள்ள ஜேர்மன் நாட்டவரான பெண்ணொருவர் திடீரென பொதுமக்களை கத்தியால் தாக்கினார். அந்த தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.

துணிச்சலாக செயல்பட்ட அகதிகள்

இந்நிலையில், அந்தப் பெண் கத்தியால் தாக்குதல் நடத்துவதைக் கண்ட மக்கள் தப்பியோட முயல, ஒரு அகதி அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினார்.  

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை துணிச்சலாக மடக்கிப்பிடித்த அகதி: ஒரு மோசமான தகவல் | Fake Image Spread Of Hamburg Attack Syria Refugee

அவரது பெயர் முகம்மது அல் முகம்மது (19). அவர் அந்தப் பெண்ணை நெருங்கவும், செசன்யா நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர் அந்தப் பெண்ணை முழங்காலில் மிதிக்க, அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார். 

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்: துணிச்சலாக செயல்பட்ட அகதி

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்: துணிச்சலாக செயல்பட்ட அகதி

உடனே, அவர் மீது பாய்ந்த முகம்மது, அந்தப் பெண்ணின் கையை அவரது முகுதுப் பையுடன் சேர்த்து அழுத்திவைத்துக்கொள்ள, பொலிசார் வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.

அந்தப் பெண்ணால் மேலும் பலர் தாக்குதலுக்குள்ளாவதைத் தடுத்த முகம்மதுவை பாராட்டிய பொலிசார், அவருக்கு காபி ஒன்றை வாங்கிக்கொடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.

ஒரு மோசமான தகவல்

விடயம் என்னெவன்றால், முகம்மதுவைக் குறித்த போலியான செய்திகள் பல சமூக ஊடகங்களில் பரவத்துவங்கியுள்ளன. 

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை துணிச்சலாக மடக்கிப்பிடித்த அகதி: ஒரு மோசமான தகவல் | Fake Image Spread Of Hamburg Attack Syria Refugee

முகம்மதுவின் படத்தை போட்டு, அல்லது AI உதவியுடன் அவரது படத்தை உருவாக்கி, போலியான செய்திகள் பரவத் துவங்கியுள்ளன.

முகம்மதுவின் செயல் குறித்து சந்தேகம் எழுப்புவதுடன், அவரைக் குறித்து அவதூறாகவும் செய்திகள் பரப்பப்பட்டுவருவதால், உண்மையாகவே அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் சந்தேகிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், ஊடகத்துறை நிபுணரான Una Titz என்பவர் கூறும்போது, இந்த செய்தியில் ஒரு சிரிய அகதி காப்பாற்றுபவராக செயல்பட்டார் என்னும் உண்மை, அகதிகள், குறிப்பாக, சிரிய அகதிகளை வன்முறையாளர்களாகவும், கத்துக்குத்து தாக்குதல் நடத்துபவர்களாகவும் பார்க்கும் உலகின் பார்வைக்கு பொருந்தவில்லை என்கிறார். 

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பெண்ணை துணிச்சலாக மடக்கிப்பிடித்த அகதி: ஒரு மோசமான தகவல் | Fake Image Spread Of Hamburg Attack Syria Refugee

அதாவது, ஒரு சிரிய அகதி தாக்குதலை நிறுத்தினார், பலரைக் காப்பாற்றினார் என்பதை பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறார் அவர்.

ஆக, முகம்மதுவின் நற்செயலை மக்கள் சந்தேகிக்கும் வகையில், சமூக ஊடகங்களில்போலிச் செய்திகளை பரப்பிவருகிறது ஒரு கூட்டம்.

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US