தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்த புதிய சிக்கல்.., விஜய் எடுத்த முக்கிய முடிவு
தமிழக வெற்றிக் கழகம் குறித்து சில போலி தகவல்களை பரப்புவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் புதிய முடிவு எடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1994 -ல் ரூ.500க்கு தாத்தா வாங்கிய SBI shares -யை கண்டுபிடித்த பேரன் .., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
புதிய சிக்கல்
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக சில போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், கட்சியின் பெயரில் சில போலி வலைதள பக்கங்களும் செயல்படுகின்றன. அதில் சில அருவருக்கும் வகையிலான படங்களும் பதிவேற்றப்படுகின்றன.
அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேடு போன்று உருவாக்கி பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. விஜயுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக புஸ்ஸி ஆனந்த் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான அறிக்கையும் பரவியது.
அதுமட்டுமல்லாமல், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று விஜய் கூறியது போல அறிக்கையும் வெளியானது.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக கடசி நிர்வாகிகளை பொலிஸில் புகார் அளிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |