பல ஆண்டுகளாக விமான பைலட்டாக நடித்து ஏமாற்றிய நபர் கைது
கனடாவில், பல ஆண்டுகளாக விமான பைலட்டாக நடித்து ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைலட்டாக நடித்த நபர் கைது
கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணியாளரான டல்லாஸ் (Dallas Pokornik, 33) என்பவர், போலி அடையாள அட்டை மூலம் பைலட்டாக நடித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Esteban Felix/The Associated Press
இப்படி அவர் பைலட் போல நடித்து ஏமாற்றியது, விமானம் ஓட்டுவதற்காக அல்ல. விமானங்களில் பணியில் இல்லாத விமானிகள் அமர்ந்து பயணிப்பதற்கான இருக்கைகளை இலவசமாக பெறும் சலுகைக்காகவே டல்லாஸ் இப்படி ஏமாற்றிவந்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள டல்லாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதுடன், 250,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |