சுவிஸ் மாகாணம் ஒன்றில் மக்களுக்கு அனுப்பப்படும் மர்ம மின்னஞ்சல்: பொலிசார் எச்சரிக்கை...
சுவிஸ் மாகாணம் ஒன்றில் மக்களுக்கு பொலிசார் அனுப்பியதாக கூறப்படும் மர்ம மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், அதை தாங்கள் அனுப்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் சிறார் பாலியல் புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தாங்கள் அப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், அது ஒரு போலியான மின்னஞ்சல் என்று கூறியுள்ள பொலிசார், அந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்க் எதையும் கிளிக் செய்யவேண்டாம் என்றும் மக்களை எச்சரித்துள்ளார்கள்.
image - worldradio